Thursday, October 10, 2024
Home » அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்கள்

by mahesh
September 13, 2024 6:30 am 0 comment

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, இலங்கை முஸ்லிம்களுக்கு வழிகாட்டல்களை அறிவித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, அவற்றை கவனத்திற்கொண்டு செயலாற்றுமாறு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக அரசியலுக்கு அப்பால் நின்று சமூக, சமய, சன்மார்க்கப் பணிகளை மேற்கொண்டுவரும் ஒரு மார்க்க, சமூக வழிகாட்டல் செய்து வரும் சபையே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பதை சகலரும் அறிவர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு வேட்பாளருக்கும் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ செயற்படுவதில்லை.

இந்நிலையில், எமது தாய் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்காகவும் குடிமக்களது நல்வாழ்வுக்காகவும் அதிகம் பிரார்த்திப்போம், இறையுதவியைப் பெற்றுத்தரும் நற்கருமங்களில் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோம் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாதெரிவித்துள்ளது. ஜனநாயக நாடொன்றில் எவரும், எந்தக் கட்சியும் தேர்தலில் போட்டியிடலாம். தான் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது அவரவர் உரிமையாகும். இந்த தேசத்தின் குடிமக்களாகிய முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள விதத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒருபோதும் வாக்களிப்பதில் அசிரத்தையுடன் நடந்து கொள்ளலாகாது.

தேர்தல் காலங்களில் குறிப்பாக, முஸ்லிம்கள் வார்த்தையளவிலோ செயலளவிலோ எந்தவொரு குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது. வதந்திகளைப் பரப்புதல், வீண் விதண்டாவாதம், சண்டை சச்சரவுகள், வன்செயல்களில் ஈடுபடுவது ஈமானைப் பாதிக்கும் அம்சங்கள் என்பதைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x