Thursday, October 10, 2024
Home » மாற்று கல்விக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்
இலவசக் கல்வியை பாதுகாப்பதுடன்

மாற்று கல்விக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட வேண்டும்

by mahesh
September 13, 2024 8:30 am 0 comment

இலவச கல்வியை முழுமையாக பாதுகாப்பதோடு மாற்றுக் கல்விகளுக்கான வாய்ப்புகளையும் பலப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் (11) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தொழில் ரீதியான போதனையாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்த அவர்,

தொழில் ரீதியான போதனையாளர்களுடைய செயற்பாடுகள் தற்போதைய கல்வி முறையோடு பொருந்த வேண்டும். இலவச கல்விக்காக நாம் முழுமையாக செயற்படுவோம். இலவச கல்வியை அறிமுகப்படுத்திய சந்தர்ப்பத்தில் சமூகத்தில் உயர் வர்க்கத்திலிருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இலவச கல்வியை முழுமையாக பாதுகாப்பதோடு மாற்றுக் கல்விகளுக்கான வாய்ப்புகளையும் பலப்படுத்த வேண்டும்.

சிறந்த தரத்திலான கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளமையால் மாற்று வழிமுறைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று தடை செய்யமுடியாது. மாணவத் தலைமுறைக்கு கல்வியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பலப்படுத்தவேண்டும். இலவசக் கல்வி முறையை பலப்படுத்துவதோடு மாற்றுக் கருவிகளுக்கான சந்தர்ப்பத்தையும் பலப்படுத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தொழில் ரீதியான போதனையாளர்களின் தொழில் செயற்பாடுகளின்போது அறிவை வளர்த்துக்கொள்வதா? அல்லது குறைத்துக்கொள்வதா? என்பது குறித்து சிந்திக்கவேண்டும். அறிவை மையமாகக்கொண்ட பொருளாதார மேம்பாட்டின்போது அவர்களுடைய பங்களிப்பு பயனுள்ளதாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும்தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x