169
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் நடாத்தப்படும் 17 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் மாத்தளை ஸாஹிராக் கல்லூரி சம்பியனானது.
மாத்தளை சிறிமாவோ பண்டாரநாயக கல்லூரிக்கு எதிராக மாத்தளை புனித தோமஸ் கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸாஹிரா அணி 235 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில் சிறிமாவோ பண்டாரநாயக அணி 191 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் மாத்தளை மாவட்ட குழுநிலை சம்பியனாக ஸாஹிரா தெரிவானது.
மாளிகைக்காடு குறூப் நிருபர்