முன்னா பியூட்டி அகாடமியின் பட்டமளிப்பு விழாவும் மற்றும் கண்காட்சியும்கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (09) விமரிசையாக நடைபெற்றது.
முன்னா பியூட்டி அகாடமியின் நிறுவனத்தின் தலைவி முனாபிரா றிஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 150 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், 10 ஆசிரியர்களின் சாதனைகள் கௌரவிக்கப்பட்டன. 30 பேர் ‘பேஸ்ட் பர்ஃபோர்மர்’ (Best Performer) விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தேசிய பத்திரிகையான தினகரன் மற்றும் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், மற்றும் கௌரவ அதிதியாக அரசாங்க தகவல் திணைக்கள முன்னாள் தகவல் அதிகாரி / சிரேஷ்ட எழுத்தாளர் கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், சிறப்பு அதிதிகளாக ஸ்கை தமிழ் ஊடகம், துணிந்தெழு சஞ்சிகையின் பணிப்பாளர் ஜே எம் பாஸித், மற்றும் துணிந்தெழு சஞ்சிகையிலன் பிரதம ஆசிரியரும் ஸ்கை தமிழ் ஊடகத்தின் பிராந்திய முகாமையாளருமான ஷிஹானா நௌஃபர் , துணிந்தெழு சஞ்சிகையின் ஆசிரியர் குழு உறுப்பினர் ஷாமேன் நிசாம்தீன். விஸ்டம் பெரடைஸ் முகாமையாளரும் பனிப்பாளருமான சாரா சிராஜ், யுனிக் பியூட்டி சலூன் பணிப்பாளர் சித்தி மர்ஷூகா மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் voice of raaz, அருந்ததி பணிப்பாளர் மாற்று மோதிரம், திருமதி மேகலா, நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு முகாமையாளர் திருமதி. ரிப்கா, N. R bridal பணிப்பாளர் ரிஸ்மினா உட்பட இலங்கையில் உள்ள முக்கியஸ்தர்கள், அழகுசாதனத் துறையின் முன்னணி நிபுணர்கள், ஊடகவியலாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்தோர் கலந்து சிறப்பித்தனர்.