சீனா கடந்த இருபது ஆண்டுகளாக ஆபிரிக்காவுடனான வர்த்தகத்தை பெருமளவில் அதிகரித்துள்ளது. அந்தக் கண்டம் முழுவதும் வீதிகள், ரயில் பாதை மற்றும் துறைமுகங்கள் கட்டுவதற்கு பில்லியன்கணக்கான ெடாலர்களை செலவிட்டுள்ளது.
இது சீனா _ஆபிரிக்கா ஒத்துழைப்பு மன்றம் (FOCAC) வாயிலாக செயற்படுத்தப்பட்டது. FOCAC என்பது ஆபிரிக்க நாடுகளும் சீனாவும் எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பதைத் தீர்மானிக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாநாடு.
இந்த ஆண்டுக்கான கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இந்த மாநாட்டில் உரையாற்றினார்.
சமீபத்தில், சீனா தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டது. இப்போது அதன் உயர் தொழில்நுட்பம் மற்றும் ‘பசுமை பொருளாதாரம்’ தயாரிப்புகளை ஆபிரிக்காவிற்கு வழங்குகிறது.
கடந்த இருபது ஆண்டுகளில், ஆபிரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், ஆபிரிக்க நாடுகளில் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் சீனா மாறியுள்ளது. அத்துடன் ஆபிரிக்காவிற்கு அதிகளவு கடன்களையும் வழங்கியுள்ளது.
சீனா 2022இல் ஆபிரிக்க நாடுகளுடன் 250 பில்லியன் அமெரிக்க ெடாலர்களுக்கும் அதிகமாக வர்த்தகம் செய்தது. பெரும்பாலும் எண்ணெய் மற்றும் கனிமங்கள் போன்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்தது. பெரும்பாலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்தது.
ஆபிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்காக சீனா கடனளித்தது. தற்போது சீனாவுக்கு அவற்றின் செலுத்தப்படாத கடன் மதிப்பு 134 பில்லியன் ெடாலர்கள். இது ஆபிரிக்க நாடுகள் உலகின் பிற நாடுகள்/அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களில் சுமார் 20% தொகை ஆகும்.
இருப்பினும், ஆபிரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கும் கடன் மற்றும் ஆபிரிக்காவில் முதலீடு செய்வதில் சமீபகாலமாக மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால், பல ஆபிரிக்க அரசுகள் தங்கள் நாடுகளில் சீனாவால் கட்டமைக்கப்பட்ட உள்கட்டமைப்புக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
இன்று வீதிகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றுக்கான பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை ஆபிரிக்க நாடுகளுக்கு வழங்குவதில் இருந்து சீனா தனது கவனத்தை மாற்றி, அதற்கு 4ஜி மற்றும் 5ஜி தொலைத் தொடர்பு வலையமைப்புகள், விண்வெளி செயற்கை கோள்கள், சோலார் பேனல்கள் மற்றும் மின்சார வாகனங்கள் போன்றவற்றை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
ஆபிரிக்க சந்தையில் மின்சார வாகனங்களை திணிப்பதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீனா ஆபிரிக்காவிலிருந்து நன்மை பெறும் விதத்தில் கடன் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசாங்கங்களை பெரும் தொகையை கடனாகப் பெற வற்புறுத்துகிறது, பின்னர் அவர்கள் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்களைத் தொடங்கும் போது அவர்களிடம் சலுகைகளை கோருகிறது என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு அங்கோலா $18 பில்லியன், ஜாம்பியா $10 பில்லியன் மற்றும் கென்யா $6 பில்லியன் கடனை திரும்ப செலுத்த வேண்டியுள்ளது. இவர்கள் அனைவரும் இந்தத் தொகைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.