இந்தியத் திரைப்படநடிகைகளில் முன்னணியாக இருப்பவர் “ராஸ்மிகா மந்தனா” ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு என பல மொழித்திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்த “கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் புகழ் பெற்ற இவர்.
இந்திய அளவில் பிரபலமானது கீதா கோவிந்தம் திரைப்படத்தில் வரும் “இன்கம் காவலே’ என்ற பாடலின் மூலம் ஆகும். இவர் இன்றய தினம் தனது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். முதல் படத்திலே பிரபலமான இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது சொத்துமதிப்பு பற்றிய விபரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
இவர் ஒவ்வொரு திரைப்படத்திற்கு ஒவ்வொரு எண்ணிக்கையில் சம்பளம் வாங்கி இருந்தாலும் இறுதியாக நடித்த அனிமல் திரைப்படத்திற்கு 8 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி உள்ளார். இந்த நிலையில் இவரது சொத்து மதிப்பு விபரங்களை பார்க்கும் பொழுது 4500 லட்சங்கள் என தெரியவந்துள்ளது. அதாவது 8 கோடி சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு 45 கோடியாக காணப்படுகின்றது. பலரை இது ஆச்சரியபடுத்தி இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.