எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்றுடன் (12) நிறைவடைந்ததை தொடர்ந்து தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி தேர்தலை நடாத்த திட்டமிட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தும் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 10 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளன.