Thursday, October 10, 2024
Home » BestWeb.lk 2024 விருது விழாவில் ECO SPINDLES மற்றும் BEIRA BRUSH இணையத்தளங்களுக்கு உயர் விருது

BestWeb.lk 2024 விருது விழாவில் ECO SPINDLES மற்றும் BEIRA BRUSH இணையத்தளங்களுக்கு உயர் விருது

by mahesh
September 11, 2024 8:00 am 0 comment

தூரிகைப் பொருட்கள் மற்றும் Monofilaments உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான BPPL Holdings இன் துணை நிறுவனங்களான Eco Spindles மற்றும் Beira Brush ஆகியவற்றின் இணையத்தளங்கள் அண்மையில் நடைபெற்ற BestWeb.lk 2024 விருது விழாவில் உற்பத்தி மற்றும் தொழில்துறை பிரிவில் 2 முக்கிய விருதுகளை சுவீகரித்துக் கொண்டது.இதன்படி, Eco Spindles இணையத்தளத்துக்கு தங்க விருதும், Beira Brush இணையத்தளத்துக்கு வெள்ளி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இலங்கையில் உள்ள நிறுவனங்களின் இணையத்தளங்களை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு முதல் LK Domain Registry இனால் வருடாந்தம் BestWeb.lk விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. உள்ளூர் திறமையாளர்களை இணங்கண்டு கொண்டாடுவது மற்றும் பங்கேற்பாளர்கள் தங்கள் ஆக்கப்பூர்வமான மற்றும் தொழில்நுட்ப திறன்களை இணையத்தளத்தில் விளம்பரப்படுத்துவதற்கும் முன்னிலைப்படுத்துவதற்கும் தளத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விருது விழா நடைபெற்று வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அந்தவகையில் 14ஆவது தடவையாக இம்முறை நடைபெற்ற BestWeb.lk 2024 விருது விழாவில் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர். இணையத்தள மற்றும் தொழில்துறை நிபுணர்களைக் கொண்ட நடுவர் குழு, படைப்பாற்றல், வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இணையத்தளங்களை மதிப்பீடு செய்து விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்படி, மிகவும் போட்டித்தன்மை நிறைந்த உற்பத்தி மற்றும் தொழில்துறை பிரிவில் Eco Spindles மற்றும் Beira Brush ஆகிய இணையத்தளங்கள் பெற்றுக்கொண்ட தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளானது, அனைத்து தளங்களிலும் BPPL Holdings நிறுவனத்தின் புத்தாக்கம் மற்றும் சிறப்புக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், டிஜிட்டல் முன்னேற்றத்தையும், தொழில்துறையில் அதன் முன்னணி நிலையையும் உறுதிப்படுத்துகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x