இலங்கையில் வங்கிச்சேவை மற்றும் நிதியியல் துறையில் முன்னிலைச் சக்தியாகத் திகழ்ந்து வருகின்ற மக்கள் வங்கி, தனது டிஜிட்டல் தளங்களில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் பதிவுகளைக் கடந்து, டிஜிட்டல் மகத்துவத்தில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் வெளிக்காண்பித்துள்ளது. அதன் புத்தாக்கமான இணைய வங்கிச்சேவைகள், மொபைல் வங்கிச்சேவை செயலிகள் மற்றும் வோலட் தீர்வுகள் ஆகியவற்றினூடாக, சௌகரியம், பாதுகாப்பு மற்றும் அணுகக்கூடிய வங்கிச்சேவை ஆகியவற்றின் தராதரங்களை மக்கள் வங்கி தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது.
“எமது இணைய வங்கிச்சேவை தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் ஆகியன வாடிக்கையாளர் சௌகரியம், பாதுகாப்பு மற்றும் அணுகக்கூடிய தன்மை ஆகியவற்றை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பரவலாக பிரபலமடைந்துள்ளமைக்கு அவை பங்களித்துள்ளன,” என்று மக்கள் வங்கியின் தலைவர் திரு. சுஜீவ ராஜபக்ச அவர்கள் குறிப்பிட்டார்.
“வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு தீர்வாக, இலகுவான திறன்மிக்க மற்றும் நிகழ்நேர தீர்வுகளை வழங்கி, இலங்கையில் வங்கித்துறையின் பரிமாண வளர்ச்சியை முன்னின்று வழிநடாத்திச் செல்வதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார். மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் இச்சாதனை இலக்கின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்துகையில், “3 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவுகளுடன், எமது வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள வலுவான வரவேற்பு, எமது டிஜிட்டல் வங்கிச்சேவை மூலோபாயத்தின் திறனுக்கு சான்றாக உள்ளது.