டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முழுமையான உரிமையைக் கொண்ட உப நிறுவனமான அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனம் தனது 57ஆவது கிளையை வெள்ளவத்தையில் திறந்துவைத்து மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. அவிசாவளை, பத்தரமுல்லை, பொரள்ளை, மாளிகாவத்தை, பிலியந்தலை மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளில் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள அலுவலகங்களுடன் இல 250, காலி வீதி, கொழும்பு 06 என்ற முகவரியில் அமைந்துள்ள இந்தப் புதிய கிளை கொழும்பு மாவட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதற்கான ஏழாவது கிளையாகப் பணியாற்றும்.
இந்தப் புதிய கிளை சுப நேரத்தில் அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் தலைவரும், குழுமத் தலைவரும், குழும முகாமைத்துவப் பணிப்பாளருமான ரோஹண திசாநாயக்க, அசட்லைன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷான் நிசங்க, அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் பணிப்பாளர் ரொமனி பராக்ரம ஆகியோரால் சுப நேரத்தில் திறந்துவைக்கப்பட்டது. வாகனங்களுக்கான லீசிங், வாகனக் கடன்கள், செயற்பாட்டு மூலதன நிதியளிப்புக்கள், நிலையான வைப்புக்கள், கூரைகள் மீதான சூரியப்படலத் தீர்வுகளுக்கான விசேட நிதியளிப்புக்கள் உள்ளிட்ட மேலும் பல பரந்துபட்ட நிதிச் சேவைகள் இந்தக் கிளையின் ஊடாக வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும். சௌகரியமான மற்றும் உடனடியான நிதித் தீர்வுகளை உடனயாக வழங்குவதே இந்த விரிவாக்கத்தின் நோக்கமாகும்.“இலங்கையிலுள்ள அனைவருக்கும் அவர்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ற வகையிலான உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த தயாரிப்புக்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதை அசட்லைன் பைனான்ஸ் நோக்காகக் கொண்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே எமது கிளை வலையமைப்பு வெள்ளவத்தையிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது” என அசட்லைன் பைனான்ஸ் லிமிடட் நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷான் நிசங்க தெரிவித்தார்.