சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்து தடுப்பூசி (Immune Globulin) கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதிமன்றத்தினால் அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தாம் சுகாதார அமைச்சராக இருந்த காலப் பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட தரமற்ற மருந்து தொடர்பான வழக்கில் கடந்த பெப்ரவரி 02ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கெஹெலிய ரம்புக்வெல்ல 7 மாதங்களுக்கும் அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கடந்த 2023 செப்டெம்பர் மாதம் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்ட போதிலும் அது பாராளுமன்றத்தில தோற்கடிக்கப்பட்டது.
ஆயினும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவர் குறித்த அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர் கைதானதைத் தொடர்ந்து சுற்றாடல் அமைச்சுப் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
சுகாதார அமைச்சர் கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு