Monday, October 7, 2024
Home » நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

- கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் எச்சரிக்கை

by Rizwan Segu Mohideen
September 11, 2024 7:13 am 0 comment

– சில இடங்களில் 40-50 கி.மீ. வேக பலத்த காற்று

இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொணராகலை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளையில் ஏற்படக் கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x