Thursday, October 10, 2024
Home » இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்க தூத்துக்குடியில் கடையடைப்பு

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்க தூத்துக்குடியில் கடையடைப்பு

by Gayan Abeykoon
September 10, 2024 1:13 am 0 comment

இலங்கைக் கடற்படையால் ைகது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்குமாறு வலியுறுத்தி தமிழ்நாடு தருவைகுளத்தில் நேற்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் இருந்து கடந்த மாதம் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் இலங்கை எல்லைக்குள் வைத்து கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 12 மீனவர்கள் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வாரியபொல சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த 3- ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி அம்மீனவர்களுக்கு அபராதம் விதித்ததுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வருமென்றும் தீர்ப்பு வழங்கியிருந்தார்.

மற்றொரு விசைப்படகில் இருந்த 10 பேர் மீதான வழக்கு செப்டம்பர் 10- ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 22 மீனவர்களையும் மீட்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நேற்று தருவைகுளத்தில் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x