Thursday, October 10, 2024
Home » தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி

by Gayan Abeykoon
September 10, 2024 1:28 am 0 comment

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் ஆங்கில கற்கைகள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த, அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று கல்வி வலயங்களில் ஆங்கில ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ELT பயிற்சிப் பட்டறையானது அதன் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். நவாஸ் தலைமையில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வை ஆங்கில கற்கைகள் திணைக்களத்தின் தலைவி கலாநிதி எம்.ஐ. பௌசுள் கரீமா ஆரம்பித்து வைத்தார்.

பயிற்சிப் பட்டறையின் முதல் சுற்றில் Action Research for ELT Practitioners எனும் தலைப்பில் பேராசிரியர் கலாநிதி நவாஸ், கருத்துக்களை முன்வைத்தத்துடன், பங்குபற்றுனர்களுடனான கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. இரண்டாம் சுற்றில் பேராசிரியர் சஹீட் அப்ராருள் ஹசன் தலைமையில் Re conceptualizing effective Assessment எனும் தலைப்பில் உரையாடலும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றன. நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீட் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியதுடன், பங்குகொண்டவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

நிகழ்வின்போது சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம் மற்றும் விரிவுரையாளர் இசட். ஹூருல் பிர்தொஎஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

றிசாத் ஏ. காதர்…

(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x