309
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் இரண்டு கூரிய வாள்களுடன் ஆறு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி இரவு மிருசுவில் பகுதியில் இளைஞர் குழுவொன்று வாள்களுடன் நடமாடுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கொடிகாமப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)