278
உடவளவ விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து தனமல்வில அலுத்வெவ காட்டுப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த மூன்று கஞ்சா சேனைகள் அதிகாரிகளால் நேற்று (9) சுற்றுவளைக்கப்பட்டுள்ளன.
எனினும், மேற்படி சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் எவரும் அவ்விடங்களில் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்படி சுற்றி வளைப்பில் அங்கிருந்த 12 ஆயிரத்திற்கும் அதிகமான கஞ்சா செடிகள் தனமல்வில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஏனைய கஞ்சா செடிகள் அனைத்தும் அங்கு அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)