மஸ்கெலிய மக்கள் வங்கி கிளையில் தன்னியக்க இயந்திரம் ஊடாக கடந்த 03ஆம் திகதி பணம் எடுக்கச் சென்ற பெண்ணின் வங்கி அட்டையை பயன்படுத்தி ரூ.16,000 பணம் சூரையாடப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, மஸ்கெலியா மொக்கா தோட்ட மிட்லோதியன் பிரிவைச் சேர்ந்த ராமன் மாரியாய் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த புகாரைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 8ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் மேற்படி மக்கள் வங்கி கிளை தன்னியக்க இயந்திரம் காணப்படும் பகுதியில் நடமாடிய யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை செய்தபோது , இவ்வாறு பல தடவைகள் திருட்டில் ஈடுபட்டு வந்தது வெளியாகி உள்ளது.
சந்தேக நபரான யுவதியை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
(மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்)