Thursday, October 10, 2024
Home » அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ்

அறிமுகமானது ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ்

by Prashahini
September 10, 2024 1:21 pm 0 comment

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோ நகரில் ஆப்பிள் நிறுவனத்தின் ‘It’s Glowtime’ நிகழ்வில் ஐபோன் 16 சீரிஸ் போன்களை அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) டிம் குக் அறிமுகம் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமாகி உள்ள இந்த போன்களின் விசேட அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

கடந்த 2007இல் ஆப்பிள் நிறுவனம் முதலாவது ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. அன்று முதல் வருடாந்தம் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதுப் புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்த முறை AI அம்சங்கள், கெமரா, கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் சிறப்பு அம்சங்கள்

  • 6.1 அங்குல திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16
  • 6.7 அங்குல திரை அளவு கொண்டுள்ளது ஐபோன் 16 பிளஸ்
  • A18 புரொசஸர் இதில் இடம்பெற்றுள்ளது
  • IOS 18 இயங்குதளம்
  • 48 MP பிரதான பின்புற கெமரா
  • 12 MP அல்ட்ரா வைட் கெமரா
  • 12 MP முன்பக்க கெமரா
  • Type C சார்ஜிங் போர்ட்
  • 5 வண்ணங்களில் வெளியீடு
  • ஐபோன் 16 (128GB)
  • ஐபோன் 16 பிளஸ் (128GB)
  • சில டாஸ்குகளை எளிதில் மேற்கொள்ள அக்‌ஷன் பட்டன்
  • கெமரா கன்ட்ரோல் பட்டன்

ஐபோன் 16 Pro , ஐபோன் 16 Pro Max சிறப்பு அம்சங்கள்

  • ஏ18 PRO சிப்
  • ஐபோன் 16 Pro 6.3 அங்குல திரை
  • ஐபோன் 16 Pro Max 6.9 அங்குல திரை
  • 48 MP பிரதான கெமரா
  • 48 MP அல்ட்ரா வைட் கெமரா
  • 12 MP முன்பக்க கெமரா
  • கெமரா கன்ட்ரோல் பட்டன் Pro மாடல் போன்களிலும் இடம்பெற்றுள்ளது

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் புதிய ஐபோன் 16 வரிசை போன்களை முன்பதிவு செய்யலாம். 20ஆம் திகதி முதல் பயனர்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x