நாட்டில் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை நேற்று (09) சடுதியாக குறைவடைந்துள்ளது.
நேற்றைய நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 747,490 ரூபாவாகவும், 24 கரட் கிராம் தங்கத்தின் விலை 26,370 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் 210,950 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்க கிராம் 24,180 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் 193,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,080 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண் 184,600 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 201,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 186,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.