199
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கையை ஆராய்ந்து, பாடசாலை விடுமுறை தொடர்பான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வாக்கெண்ணும் நிலையங்களை தயார்படுத்தும் நடவடிக்கைகள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர், 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.