Thursday, October 10, 2024
Home » காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

by Gayan Abeykoon
September 10, 2024 7:22 am 0 comment

யலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியின் கல்குடா மற்றும் ஓட்டமாவடி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்றுமுன்தினம் (08) முற்பகல் காத்தான்குடி -05 பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்.

அங்கு அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நிதியத்தின் தலைவர் அப்துர் ரஊப் மிஸ்பாஹி உட்பட அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எல். எம். அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் பிரதி மேயர் எம். எம். ஜசீம் ஆகியோர் இதன்போது இணைந்திருந்தனர்.

பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலின் கீழ் 02 ஜும்மா பள்ளிவாசல்கள் உட்பட 04 பள்ளிவாசல்கள், 07 குர்ஆன் பாடசாலைகள், 02 அரபிக் கல்லூரிகள் மற்றும் 30 இற்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காத்தான்குடி நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து  கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x