யாகி சூறாவளியால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் வியட்நாமில் குறைந்து 59 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆசியாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட சக்திமிக்க சூறாவளியாக சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் சேதத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த சனிக்கிழமை வியட்நாமின் வடகிழக்கு கடற்கரையை யாகி சூறாவளி தாக்கியது.
இதில் பலியானவர்களில் வட மேற்கு வியட்நாமின் மலைப்பிராந்தியத்தில் நிலச்சரிவு ஒன்றில் கொல்லப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை உட்பட ஆறு பேரும் அடங்குவர். அதேபோன்று நேற்றுக் காலை 20 பேருடன் சென்ற பஸ் வண்டி ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
ஹய் போங் நகரிலிருந்து ‘யாகி’ தற்போது லாவோஸ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. வேகம் குறைந்தவுடன் தேடல் மீட்புப் பனிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி காரணமாக 50,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளிலும் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாக வியட்நாம் அரசு குறிப்பிட்டுள்ளது.