அணுத்துணிக்கைகள் ஒருவித நீள்வட்டப் பாதை சுழற்சியில் இருந்துகொண்டு சுயமாக உருவாகிய சக்திப் புலத்தினால் மிக நுண்ணிய துணிக்கைகள் அதிர்ந்துகொண்டு உள்ளதாக க் கூறுகிறது. இந்த சுயமாக இயங்கும் சக்திப் புலம் ஹிக் போஸன் சக்திப் புலம் எனப்படுகிறது. இந்த சக்திப்புலம் எங்கிருந்து வருகிறது என்பதை அறிவியல் இன்னும் கண்டு பிடிக்க முடியாததால் இவை சுய இருப்பு உடைய சக்திப் புலங்கள் என்று அறிவியல் கூறுகிறது.
இதனால் இவை கடவுள் துணிக்கைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றலின் மூலமும், இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றமும் இந்திய தத்துவ ஞானத்தால் “ நாதம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த நாத சக்தி எங்கும் நிறைந்த தும் இயற்கையின் மையமானதும், நுண்ணியதுமாக இருந்து கொண்டு எல்லா சக்திகள், அதிர்வுகள், அசைவுகளுக்கும் மூலமாக இருக்கிறது. இயற்கையை ஆழமாக ஆராய்ந்த அறிஞர்கள் மிக நுண்ணிய சப்தம் ஓங்காரமாக இருப்பதாக க் கூறுகிறார்கள். இந்த ஓங்கார நாதம் சுயமாக வெளிப்பட்ட எங்கும் நிறைந்த, நித்தியமான உணர்வு சக்தியான பிரம்மத்திலிருந்து வெளிப்பட்ட பரிணாம அதிவாகும். கடிகாரத்தில் உள்ள ஊசலை அலையவிட்டால் அது தொடர்ச்சியாக கடிகாரத்தை நாமாக நிறுத்தும் வரை அசைந்துகொண்டிருக்கும் என்பதை நாமறிவோம்.
இதைப்போன்று பிரபஞ்சத்தில் இருக்கும் நுண்ணிய துணிக்கைகள் ஓங்காரம் எனும் நாதத்ததினால் தூண்டப்பட்டு அசைந்துகொண்டிருக்கிறது. இயற் கையின் சுழற்சி எப்படி ஒரு விளையாட்டு ஊசல் சுழன்றுகொண்டு இருக்கிறதோ அப்படி சுழன்று கொண்டு இருக்கிறது. இந்த விளையாட்டு ஊசலின் இயக்க சக்தி சிறிது காலத்தில் தேய்ந்து விடும் ஆனால் நித்தியமான பரிணாம சக்தியான பிரம் மத்தின் இயக்க சக்தி எப்போதும் தேய்மானம் அடையாமல் நிரந்தரமாக இருக்கிறது.
சப்த சுரங்கள் என்பவை ஓங்காரத்தின் ஏழு வித்தியாசமான அதிர்வுகளாகும். இந்திய இசையினை பாரம்பரிய இசை, மெல்லிசை என இரண்டு விதமாக பிரிக்கலாம். பாரம்பரிய இசையின் அமைப்பினை சுரம், பதம், லயம், மார்க்கம் என நான் கு பகுதிகளுடையதாக பிரிக்கலாம். சுரம் இல்லாத பாடல்கள் அபிதான வான எனப்படும். இவை அபிவாதனம் – உரையாடல் செய்யும் போது பாவிக்கும் கோர்வையான சொற்களைக் குறிக்கும்.
ஓங்காரம் என்ற மூல நாதம் பிரபஞ்சத்திலுள்ள எல்லா அதிர்வு சக்திகளினதும் தொகுப்பாகும். இதுவே அனைத்து இசைச் சுரங்களிற்கும் மூலமாகும். எப்படி சூரியனிலிருந்து ஏழு நிறங்கள் வெளிப்படுகிறதோ அதைப்போல் ஓங்காரத்திலிருந்து சப்த ஸ்வரங்கள் வெளிப்படுகிறது. இந்த இசைச் சுரங்கள் ஸ, ரி, க, ம, ப, த, நி என ஏழாக வெளிப்படுகிறது.