எழில் கொஞ்சும் மலையக மண்ணில், அருள்மிகு விநாயகப்பெருமானுக்கு ஆவணி மாத சதுர்த்தி பெருவிழா, இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான முறையில் கொட்டகலை நேற்று (8) நடைபெற்றது.
இந்துக்களின் பிரதான சமயப் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பத்து விநாயகர் சிலைகள், ஹட்டன் கொட்டகலை அமைந்துள்ள வாவியில்நேற்று (08) கரைக்கப்பட்டன.
இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த இந்த சமய நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த குருமார்கள் குழுவொன்றும் கலந்துகொண்டது.
குறித்த நிகழ்வு பகல் 1.00 மணி முதல் 4.00 மணிக்குள் பெரிய மண்வெட்டி தோட்ட ஆலய முன்றலிருந்து ஆரம்பித்து (கொட்டகலை பிரதேச சபைக்கு அருகில்) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கொட்டகலை வாவியில் கரைக்கப்பட்டன.