6.6K
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு பின்னர், வாக்கெண்ணும் நிலையங்களை தயார்ப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்களிப்பு மையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் தயார்ப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைகளை பரிசீலித்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு முன்னதாக தெரிவித்திருந்தது.