Thursday, October 10, 2024
Home » பங்கேற்கவிருந்த பிரசார கூட்டத்தில் துப்பாக்கி ரவைகளுடன் இளைஞன் கைது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பங்கேற்கவிருந்த பிரசார கூட்டத்தில் துப்பாக்கி ரவைகளுடன் இளைஞன் கைது

by damith
September 9, 2024 9:26 am 0 comment

மட்டக்களப்பு கிரான் கோரகல்லி மடுவில் நேற்று (8) ஏற்பாடு செய்யப்பட்ட சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசார கூட்டத்தில், ஜனாதிபதி வருகை தரவிருந்தவேளை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை துப்பாக்கி ரவையுடன் கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

வாகரை அம்பந்தனாவெளியைச் சேர்ந்த ச. இன்பராசா வயது (22) என்ற மீனவத் தொழில் ஈடுபடும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் தேர்தல் பிரசாரக் கூட்டம் கிரான் கோரகல்லிமடு விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பொதுமக்கள் பலர் வாகனங்களில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கட்சி ஆதரவாளர்களால் அழைத்து வரப்பட்டிருந்தனர். குறித்த இளைஞனும் இதுபோன்று வாகரை பிரதேசத்தில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தார். இவ்வாறான நிலையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் எதுவித குழப்பமுமின்றி சற்று தாமதித்து நடைபெற்றது.

பாசிக்குடா நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x