இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக “ரணில் வில்லத்தரகே அறக்கட்டளை” இனால் அதன் தலைவர் ரணில் விலத்தரகேவினால் www.jobonline.lk எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிலியந்தலை சுசிறி வரவேற்பு மண்டபத்தில் இந்த இணையத்தளத்தின் அறிமுக விழா இடம்பெற்றது.
Gflock நிறுவனத்திலும் ஏனைய முக்கிய வணிக நிறுவனங்களிலும் காணப்படும் தொழில்வாய்ப்புகளையும் கண்டறிந்து, பொருத்தமான வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும். அவர்களின் கல்வி மற்றும் தொழில்முறை பயிற்சிகளின் அடிப்படையில் பொருத்தமான தொழில்வாய்ப்புகளை பெறுவதற்கு இந்த இணையத்தளத்தின் மூலம் சரியான வழிகாட்டலைப் பெறலாம். இந்த இணையத்தளம் மூலம், மிகப் பெரும் தனியார் நிறுவனங்களில் காணப்படும் கீழ் மட்டம் முதல் நிறைவேற்று மட்டம் வரையிலான பல்வேறு வேலை வாய்ப்புகளுக்கு செல்ல இந்த இணையத்தளத்தின் மூலம் முடியும்.
இந்த அறிமுக விழாவில் உரையாற்றிய ரணில் வில்லத்தரகே,
Gflock நிறுவனத்தில் மாத்திரம் மாதாந்தம் சுமார் 10 தொழில்வாய்ப்புக்கான வெற்றிடங்கள் உருவாகுவதோடு, அந்த வேலைவாய்ப்புகளை பூர்த்தி செய்ய, உரிய தகுதியை பூர்த்தி செய்பவர்களுக்கு இந்த இணையத்தளம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று எமது நிறுவனத்திற்கு அவசியமான ஊழியர்கள், தொழில் வல்லுனர்களையும் கண்டுபிடிப்பது கடினமாகிவிட்டது. எனவே, இது போன்ற இணையத்தளத்தை உருவாக்க வேண்டிய தேவை அவசியமாகி இருந்தது. இதன் மூலம், தனியார் துறைக்குத் தேவையான பொருத்தமான நபர்களை அடையாளம் காணும் வாய்ப்பைப் பெறுவது மிகவும் முக்கியமானதாகும். உங்களது விண்ணப்பப் படிவங்களை உள்ளிடுவதற்கு இந்த இணையத்தளத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் உரிய வணிக நிறுவனங்கள் தமக்குத் தேவையான பணியாளர்களை அடையாளம் காணும் வாய்ப்பு காணப்படுகின்றது. அத்துடன், இதில் வெளியிடப்படும் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை அனுப்பவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தின் ஊடாக தொழில் வாய்ப்புகளை சிரமமின்றி தேடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை முக்கியமான விடயமாகும். “www.jobonline.lk” எனும் இணையத்தளத்தில், வேலை தேடும் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது தகைமைகளுக்கு ஏற்ப தொழில் வாய்ப்புகளை வழங்குவதே எமது நோக்கமாகும் என, அதன் தலைவர் ரணில் விலத்தரகே மேலும் தெரிவித்தார்.