ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துவரும் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளார்.
கண்டியில் நேற்று (09) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கீதா குமாரசிங்க, சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி காலி மாவட்டத்திலிருந்து தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றத்துக்கு தெரிவித்த கீதா குமாரசிங்க, தற்போது பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.