278
இலங்கை அணியுடனான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஒல்லி போப் சதம் அடித்ததன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதாவது ஒல்லி போப் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 7 சதங்கள் அடித்துள்ளார். இதில் ஆச்சரியமளிக்கும் விடயம் என்னவென்றால், இந்த ஏழு சதங்களும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்தவை ஆகும். இதன் மூலம், தனது டெஸ்ட் கெரியரின் முதல் ஏழு சதங்களையும் வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
- தென்னாபிரிக்காவுக்கு எதிராக 135 ஓட்டங்கள் (2020)
- நியூசிலாந்துக்கு எதிராக 145 ஓட்டங்கள்(2022)
- பாகிஸ்தானுக்கு எதிராக 108 ஓட்டங்கள்(2022)
- அயர்லாந்துக்கு எதிராக 205 ஓட்டங்கள்(2023)
- இந்தியாவுக்கு எதிராக 196 (2024)
- மே.தீவுகளுக்கு எதிராக 121 ஓட்டங்கள் (2024)
- இறுதியாக தற்போது இலங்கைக்கு எதிராக 154 ஓட்டங்களை குவித்து இந்த சாதனை படைத்துள்ளார்.