Monday, October 7, 2024
Home » இன்று முதல் தென்மேல் பகுதிகளில் மழை நிலை அதிகரிப்பு

இன்று முதல் தென்மேல் பகுதிகளில் மழை நிலை அதிகரிப்பு

- நாட்டின் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

by Rizwan Segu Mohideen
September 9, 2024 7:22 am 0 comment

– மட்டு, அம்பாறை, ஊவாவில் மாலையில் அல்லது இரவில் மழை
– சில இடங்களில் 40-50 கி.மீ. வேக பலத்த காற்று

இன்று (09) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழை நிலைமையில் சற்று அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.​​

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொணராகலை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளையில் ஏற்படக் கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x