சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன் இந்திய பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் (07) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலையத்தின் குடிவரவு பயணிகள் முனையத்தில் வைத்து குறுத்த நபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவரின் காற்சட்டைப் பையிலிருந்து ஒரு கிலோ 158 கிராம் நிறையுடைய 9 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 29 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர், கடந்த 06ஆம் திகதி சென்னையிலிருந்து வருகைத்தந்துள்ள நிலையில், மீண்டும் இந்தியாவின் பெங்களூர் செல்வதற்காக நேற்று முன்தினம் 07ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுள்ள நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.