Thursday, October 10, 2024
Home » 10 வருடங்களாக தொடரும் காதல்

10 வருடங்களாக தொடரும் காதல்

by damith
September 8, 2024 4:03 pm 0 comment

இந்திய திரையுலகில் தனது இயற்கை அழகினாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதை வென்றவர் தான் நடிகை சாய் பல்லவி. இவர் செயற்கையான முகப்பூச்சுகள் இல்லாமலேயே இயற்கையான அழகில் மிளிரும் நடிகையாக காணப்படுகின்றார். இதன் காரணமாகவே அவர் நடிக்கும் திரைப்படங்கள் மிகக்ப் பெரிய கவனம் ஈர்த்து வருகின்றன.

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு மருத்துவ பட்டம் பெற்ற சாய்பல்லவி, பிரேமம் படத்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர், தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பலமொழிகளிலும் நடித்து வருகின்றார்.

அத்துடன் மருத்துவராகவும் நடிகராகவும் காணப்படும் சாய்பல்லவி சிறந்த டான்ஸராகவும் காணப்படுகின்றார். தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் இவர் ரவுடி பேபி பாடலுக்கு ஆடிய ஆட்டம் தற்போது வரையில் பேமஸ் ஆகவே காணப்படுகின்றது.

தற்போது பாலிவூட் சினிமா உலகில் நுழைந்துள்ளார் சாய்பல்லவி. ரன்வீர் கபூர் ராமராக நடிக்கும் ராமாயண கதையில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது தொடர்பான போஸ்டர்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

மேலும் தனக்கு கிடைக்கும் பட வாய்ப்புகளை கவனமாக தேர்ந்தெடுக்கும் சாய் பல்லவி அந்தப் படத்தின் கதை பிடிக்கவில்லை என்றால் நோ சொல்லவும் தயங்க மாட்டார். படத்தில் முத்தக் காட்சிகள் இருந்து விலகி இருக்கும் சாய் பல்லவி மகாபாரதம் தொடர்பில் அண்மையில் கூறிய கருத்துக்கள் வைரல் ஆகி வருகின்றன.

அதன்படி அவர் கூறுகையில், மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். கடந்த பத்து வருடங்களாக அபிமன்யுவை பற்றி நிறைய படித்து அறிந்துள்ளேன். அதன் மூலம் அவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகின்றேன் என கூறியுள்ளார். அவரது காதல் வித்தியாசமானது என ரசிகர்கள் பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x