இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான 37 வயதுடைய மொயீன் அலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 T20 சர்வதேச போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும் 67 IPL போட்டிகளிலும், உலக அளவில் நடைபெறும் T20 லீக் கிரிக்கெட்களிலும் கலந்து கொண்டு ஆடி வருகிறார்.
இவர் 2019 ஒருநாள் உலகக்கிண்ணம் மற்றும் 2022 T20 உலகக்கிண்ணம் வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். மிகச்சிறந்த சகலதுறை வீரர்களுள் ஒருவராக ஒருவராக கருதப்பட்ட மொயீன் அலிக்கு எதிர்வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார். இதனால் இரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.