பாகிஸ்தானின் பலுகிஸ்தானின் கரான் மாவட்டத்தில் 23 மாத குழந்தையொன்று இறந்துள்ள நிலையில் போலியோ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆண்டு உயிரிழப்பு 15 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
பலுகிஸ்தானின் காரான் மாவட்டத்தில் போலியோ வைரஸ் இரண்டு வயது குழந்தையின் உயிரைக் கொன்றது
டெரா புக்டி, சமான், கிலா அப்துல்லா, குவெட்டா, ஜால் மாக்சி, ஜோப், கிலா சைஃபுல்லா மற்றும் இப்போது கரான் ஆகிய எட்டு மாவட்டங்களில் இருந்து 12 சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், பலுகிஸ்தான் நோயின் மையமாக மாறியுள்ளது.
கரான் தெஹ்சிலில் உள்ள யூனியன் கவுன்சில் தெற்கு கிராமமொன்றில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர், ஆகஸ்ட் 19 அன்று குவெட்டாவில் உள்ள மருத்துவமனையில் இறந்தார் என்று தேசிய சுகாதார நிறுவனத்தின் (NIH) அதிகாரி தெரிவித்தார்.
பெற்றோரின் கூற்றுப்படி, ஜூலை 31 அன்று குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதோடு கீழ் மூட்டுகள் மற்றும் கழுத்து தசைகள் இரண்டும் செயலிழந்தன.
குடும்பத்தினர் குழந்தைக்கு ஐந்து நாட்கள் வீட்டில் சிகிச்சை அளித்து பின்னர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி உள்ளூர் முறைசாரா சுகாதார நிலையமொன்றுக்கு அழைத்துச் சென்றனர்.
மூன்று நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 7 ஆம் திகதி, குழந்தை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கு அவருக்கு போலியோ வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.
அதே தினம் இது தாடர்பில் விசாரணை செய்யப்பட்டு, ஒரு மாதிரி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. .
வைரஸ் பரவுவதற்கு முன்பு குழந்தையின் மருத்துவ வரலாறு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குழந்தை ஆகஸ்ட் 19 ஆம் திகதி இறந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.