அங்கீகரிக்கப்படாத உத்தியோகபூர்வமற்ற சந்தை இறக்குமதிகள் காரணமாக இலங்கையின் வரி வருவாயில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்கள் நுகர்வோரிடையே தவறான ஆர்வத்தை ஏற்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதார நிலைபேறானதன்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான ஆபத்துகளை உருவாக்குகின்றன. வர்த்தக முத்திரை உரிமையாளர்களின் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்படும் தயாரிப்புகளை உத்தியோகபூர்வமற்ற சந்தை அல்லது இணையான இறக்குமதி எனக் குறிப்பிடுகிறோம்.
இவை வரி வருவாய் மற்றும் அந்நியச் செலாவணியில் கணிசமான இழப்புகளை ஏற்படுத்துகின்றன.
இதனால் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்களுடைய நிலைப்பாட்டைத் தக்கவைக்க சிரமங்களை சந்திக்கிறார்கள்.
சிறிய அளவிலான சேமிப்புகள் ஆரம்பத்தில் நுகர்வோருக்கு கிடைக்கலாம், ஆனால் நீண்ட காலத்தில் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும்.
இணை இறக்குமதி சந்தை பொருட்கள் பெரும்பாலும் உத்தரவாதங்கள் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு இல்லாமல் இருப்பதால், சிக்கல்கள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு சிக்கல்களைத் தவிர்க்க முடியாது.
இதனைத் தடுப்பதற்காக, ஒழுங்குமுறைகளை அமுலாக்குதல், நுகர்வோர் விழிப்புணர்வு, மற்றும் உத்தியோகபூர்வ வணிகங்களுக்கு ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த இறக்குமதிகளை எதிர்த்துப் போராடும் விரிவான மூலோபாயம் அரசாங்கத்தால் தேவைப்படுகிறது.
நாட்டின் நிதி ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும், நியாயமான சந்தையை உறுதி செய்வதற்கும், இணையான இறக்குமதி சந்தை நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதுஎன்றும், அரசாங்கம் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இதனால், பொருளாதாரத்தை மீளெழுப்புவதும், நிலைத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதும், நீண்ட காலத்தில் பொருளாதாரத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும்.