132
62 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்தப்பெண் 44 வயதுடைய ஹெனேகம, அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலுவன வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகநபர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெமட்டகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.