Home » தொண்டமான்கள் எப்போதும் வெல்லும்; பக்கமே இ.தொ.கா வின் உடன்படிக்கைகள் எப்போதும் மலையக மக்களுடனேயே

தொண்டமான்கள் எப்போதும் வெல்லும்; பக்கமே இ.தொ.கா வின் உடன்படிக்கைகள் எப்போதும் மலையக மக்களுடனேயே

இ.தொ.காவின் இரத்தினபுரி மாவட்டத் தலைவர் ரூபன் பெருமாள்

by Gayan Abeykoon
September 6, 2024 1:24 am 0 comment

தொண்டமான்கள் எப்போதும் தேர்தலில் வெற்றி பெறுகின்ற தரப்புடனேயே இருந்துள்ளார்கள்.

இம்முறையும் ஜீவன் தொண்டமான் சார்ந்துள்ள வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி என இ. தொ. கா வின் இரத்தினபுரி மாவட்டத் தலைவர் ரூபன் பெருமாள் தெரிவித்தார்.

திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் சஜித் பிரேமதாசவுடன் உடன்படிக்கை செய்துள்ளார்கள். ஆனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் மலையக மக்களுடனேயே  உடன்படிக்கை செய்து வந்துள்ளது. இம்முறையும் அவ்வாறு தான் என்றும் அவர் தெரிவித்தார்.

‘இயலும் ஸ்ரீலங்கா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் பெல்மதுளை நகரில்  நடைபெற்ற போது அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மலையக மக்கள் பாரிய கஷ்டங்களில் உள்ள போதெல்லாம் அமைச்சர் ஜீவன் தொண்டமான தனது சிறந்த வேலைத் திட்டங்களால் அவர்களுக்கு உதவி வருகின்றார்.

கடந்த முறை பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 36,000 மக்கள் வாக்களித்த போதும் மனோ கணேசன் இரத்தினபுரி  மாவட்டத்திலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வழங்காதது ஏன்?  மனோ கணேசன் இரத்தினபுரி மாவட்டத்திற்கு என்ன செய்துள்ளார்? என கேட்க விரும்புகின்றேன்.2015 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்தார்.

அந்தக் காலத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் எந்த  தமிழ் மக்களுக்கும் அவர் வீடுகளை வழங்கவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி கூற வேண்டும்.

மலையக மக்கள் இம்முறை தேர்தலில் அவருக்கு முழுமையான ஆதரவளிப்பது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x