இரத்தினபுரி, கிரியெல்ல பிரதேச செயலகப் பிரிவில், இவ் வருடத்தின் 08 மாத காலப்பகுதிக்குள் 115 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிரியல்ல சுகாதார வைத்திய அதிகாரி அசேல துசான் தெரிவித்தார்.
இதனால், கிரியெல்ல பிரதேச செயலக பிரிவில் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சிரமதான நிகழ்வுகள் மற்றும் வீதி நாடகம் போன்றவைகளும் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இலங்கையில் தற்போது 35 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 3,500 டெங்கு நோயாளர்கள் இரத்தினபுரி மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரி அசேல துசான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் கண்காணிப்பின் கீழ், கிரியல்ல பிரதேச செயலக காரியாலயம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், குருவிட பிரதேச சபை கிரியெல்ல பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேசத்திலுள்ள சமூக சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலை திட்டங்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.