லண்டன் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளன.
பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீடு லண்டன் ஈலிங் அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. (London Ealing Amman temple, 5, Chapel Rd, London W13 9AE, U.K)
எதிர்வரும் 26 ஆம் திகதி ஒக்டோபர் 2024 சனிக்கிழமை மாலை 16.00 முதல் 18.30 மணி வரை இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் தலைமையுரையை இங்கிலாந்து சைவ மன்றங்களின் காப்பாளர் சிவா தம்பு வழங்குவார்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை ஈழத்தின் மூத்த ஆவணக்காப்பாளர் பத்மநாப ஐயர், மற்றும் சி.கிருபாகரன், சண்முகதாசன் ஆகியோர் வழங்குவர்.
‘பாலஸ்தீனம் எரியும் தேசம்’ நூல் அறிமுகவுரையை பா. நடேசன் நிகழ்த்துவார். அதன்பின் ‘ஓர்மத்தின் உறைவிடம்’ இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை நா. சபேசன் ஆற்றுவார்.
தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும் நூலின் அறிமுகவுரையை டொக்டர் வே. ரவிமோகன் ஆற்றுவார்.
அத்துடன் ‘இலங்கை இதழியலில் சிவகுருநாதன்’ நூலின் அறிமுகவுரையை கோவிலூர் செல்வராஜன் ஆற்றுவார்.
அத்துடன் இந்நூல் வெளியீட்டில் ஈழத்து சிற்றிதழ்கள் பற்றிய சிறப்புரையை திருமதி மாதவி சிவலீலன் வழங்குவார்.
லண்டன் மாநகரில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் ஏற்புரையை ஐங்கரன் விக்கினேஸ்வரா நிகழ்த்துவார்.