298
ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அனுர விதானகமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.ஜே.எம்.முஸம்மில் பதவி விலகியமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக அனுர விதானகமகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அமுலக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து, ஏ.ஜே.எம். முஸம்மில் நேற்று (05) தமது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்திருந்திருந்ததுடன், மினுவாங்கொடையில் நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.