Tuesday, October 8, 2024
Home » வெள்ளத்தில் 1,000 பேர் உயிரிழந்ததால் 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

வெள்ளத்தில் 1,000 பேர் உயிரிழந்ததால் 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை

- வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாக குற்றச்சாட்டு

by Prashahini
September 6, 2024 1:07 pm 0 comment

வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி 30 அதிகாரிகளுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வட கொரியாவில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் 1,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட மாகாணங்களில் உள்ள அதிகாரிகள் 30 பேருக்கு அதிபர் கிம் ஜாங் உன் மரணதண்டனை விதித்ததாகவும், கடந்த மாதம் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தென் கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெள்ளத்தைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு கடும் தண்டணை வழங்க வேண்டும் என்றுஅதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டதாக அந்நாட்டு ஊடகம் கடந்த மாதம்செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், 30 அதிகாரிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட கொரியாவில் பத்திரிகைச் சுதந்திரம் முடக்கப்பட்டிருப்பதால் அந்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்துசெய்திகள் வெளிவருவதில்லை. இந்தச்சூழலில், அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த செய்தியை வட கொரியாவின் அண்டை நாடான தென் கொரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக வெள்ள பாதிப்பு தொடர்பாக தென்கொரிய நிறுவனம் வெளியிட்ட செய்தியை மறுத்த வட கொரியா,“கனமழையால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக வெளிவரும் செய்திகள் தவறானவை. எங்கள் நாட்டின் மீது அவப்பெயர் ஏற்படுத்த தென் கொரியா இத்தகைய வதந்திகளைப் பரப்புகிறது”என்று தெரிவித்தது.

வடகொரியாவில் கரோனாவுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 10 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வந்தன.  கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x