Wednesday, September 11, 2024
Home » வேலுகுமார் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட தடை

வேலுகுமார் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட தடை

- தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

by Prashahini
September 5, 2024 5:06 pm 0 comment

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பாக அவதூறான மற்றும் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிடப்படுவதை தடுத்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக தடை கட்டளையை கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான பிறப்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை பிரதிவாதியாக்கும் வகையில் வேலுகுமார் எம்.பியால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலித்த பின்னர் இந்த தடை உத்தரவை இன்று (05) நீதவான் பிறப்பித்துள்ளார்.

அக்குரஸ்ஸவில் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்த கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், உண்மைக்கு புறம்பான மற்றும் தீங்கிழைக்கும் காரணத்தால் ஏற்பட்ட தவறான அபிப்பிராயத்துக்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த மாவட்ட நீதவான், தயாசிறி ஜயசேகர எம்.பியின் முகநூல் பக்கத்திலோ அல்லது ஜக்கிய மக்கள் சக்தியின் முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலோ இது தொடர்பான விடயங்களை மேலும் வெளியிடுவதை தடுக்கும் தடை உத்தரவை பிறப்பித்ததுடன், எதிர்வரும் 19ஆம் திகதி இது தொடர்பான விடயங்களை முன்வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x