281
– கூட்டணியில் 10 அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று (5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைவராக தெரிவாகியுள்ளதோடு, குறித்த கட்சியின் செயலாளராக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 10 அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.