தேர்தல் விஞ்ஞாபனம்
தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பாவனை, விற்பனை, அவற்றுக்கு அடிமையாதல், அதிலிருந்த விடுபட முடியாமை போன்றவை பாரிய சமூகப் பிரச்சினைகளாகும். இந்த நிலைமையை முற்றாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைவஸ்துக்களை இல்லாதொழித்தலில் இருந்து போதைக்கடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது வரையிலான அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கும் வகையில், பரந்த அதிகாரமுடைய போதைப்பொருள் இல்லாதொழிப்பதற்குக் கட்டளையிடும் தலைமையகமொன்றை 2025 ஆம் ஆண்டில் தாபிப்பதற்கான புதியதொரு சட்டம் 2025 இல் அங்கீகரிக்கப்படும்.
ஆரண்யங்களில் வசிக்கும் பிக்குமார்களுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நிதியமொன்று ஏற்படுத்தப்படும். பிரிவெனாக்களின் கல்வி விருத்திசெய்யப்படும். துறவிகளாவதற்கு வருகின்ற பிக்கு அன்னையர்களுக்கு ஆன்மீக முன்னேற்றம் ஏற்படக் கூடியவாறு உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படும்.
இந்து சமயம் அநுராதபுரம் – பொலன்னறுவை யுகங்களில் இருந்தே இலங்கையில் பரவியது. நாட்டில் இந்து ஆலயங்கள் முன்னேற்றப்படும். அதன் கீழ் மன்னார் திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம் ஆகிய கோயில்களை அடிப்படையாகக் கொண்டு தெற்கின் கைலாய கோயில் யாத்திரை அறிமுகப்படுத்தப்படும் என்பதுடன், திருகோணமலை திருக்கோணேஸ்வரம், தெற்கின் கைலாய கோயில் யாத்திரையின் பிரதான இந்து மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும்.
இந்துமதத் தலைவர்களுடன் கலந்துரையாடி இலங்கையில் இந்து சமயத்தை முறையாக கடைப்பிடிப்பதற்குரிய கல்வி நிலையமொன்று நிறுவப்படும்.
கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு, கிறிஸ்தவ சூழலொன்றுக்குள் கிறிஸ்தவத்தைக் கற்பிப்பதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்படும். கிறிஸ்தவ கல்வியைப் பெற்றுக்கொடுக்கும் செமினரி நிறுவனங்கள், இடங்களுக்கு அரச உதவிகள் வழங்கப்படும்.
இஸ்லாம்மதக் கல்விக்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு, மதரஸாக்கல்வி அபிவிருத்தி செய்யப்படும். முஸ்லிம் உடலங்களை தகனம் செய்தல் போன்ற விஞ்ஞான ரீதியற்ற மற்றும் மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு முகம் கொடுத்த அனைத்து குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் ஒருபோதும் ஏற்படாதவாறு புதிய சட்டங்கள் 2025 முதல் அறிமுகப்படுத்தப்படும்.
எந்தவொரு மதத்திற்கோ இனத்திற்கோ தமது கலாசார அடையாளங்களுக்கு மற்றும் மத அனுட்டானங்களுக்கு தடைகளை ஏற்படுத்தாத சமூக சூழல் ஒன்று தாபிக்கப்படும்.
சிறந்த ஊடக சூழல்:
மிகவும் உணர்வுபூர்வமான சமுதாயம் ஒன்றை உருவாக்குவதற்கு ஏற்ற வகையிலான புதிய ஊடகம் தேவைப்படுகின்றது. தேசிய ஊடகத்துறைக்கான கொள்கைத்திட்டம் ஒன்றைத் தயாரித்து மனித நேயமுள்ள மற்றும் ஒழுக்கமுள்ள சட்டங்களை மதிக்கும் ரசனை மிக்க புத்திகூர்மையான சமுதாயம் ஒன்றுக்கு இதன் மூலம் அடித்தளம் ஒன்று இடப்படும்.
ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர எழுத்தாளர்கள் ஆகியோரை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர எழுத்தாளர்களை வலுவூட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊடகவியலாளர்களுக்கான உயர் கல்வி நிறுவனம் ஒன்றை நிறுவும் பணிகள் 2025 இல் ஆரம்பிக்கப்படும்.
பிராந்திய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். காணாமற் போனவர்கள் தொடர்பான நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் எல்ரீரீஈ உறுப்பினர்களுக்கு சுயதொழில் ஆரம்பிப்பதற்கான நிதியுதவி வழங்கப்படும்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக 2024 இல் நாம் முன்வைத்த முன்மொழிவின் பிரகாரம்,
1. அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும். மாகாண சபைகளுக்குரிய எனினும் மத்திய அரசாங்கத்தினால் கையகப்படுத்தியுள்ள முதலாம் அட்டவணையில் உள்ள அதிகாரங்களை மீண்டும் மாகாண சபைகளுக்கு வழங்குவோம்.
2. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவது தொடர்பான தீர்மானம் எடுக்கும் அதிகாரம் புதிய பாராளுமன்றத்துக்கு வழங்கப்படும்.
3. கட்சித் தலைவர்களால் அங்கீகரித்த 3ஆம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்படும்.
இலங்கையின் எதிர்காலத்தை மிகவும் பலமுள்ளதாகக் கட்டியெழுப்பவதற்கு கட்டாயம் செய்யவேண்டிய பல மறுசீரமைப்புக்கள் உள்ளன. ஜனாதிபதி தேர்தலையடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஒரு வருட காலத்துக்குள் புதிய அரசியல் யாப்பொன்றை தயாரிக்கும் பொறுப்பினை நான் பாராளுமன்றத்துக்கு வழங்குவேன். நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதா இல்லையா என்ற தீர்மானம் புதிய பாராளுமன்றத்தினால் எடுக்கப்படும்.
இரண்டாவது மந்திரி சபை:
சட்டவாக்கப் பேரவையின் அறிக்கைக்கு அமைய மாகாண சபை பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக இரண்டாவது மந்திரி சபை நிறுவப்படும்.மாகாண சபைகளுக்கு அரசியலமைப்பு மற்றும் சட்டங்களினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை மேற்பார்வை செய்யும் அதிகாரம் இந்த மந்திரி சபைக்கு வழங்கப்படும்.
மிகவும் பலம் பொருந்திய சமுதாயம் ஒன்றின் மூலம் நாட்டுக்கு பெருமளவு பயன்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எனினும் எமது நாட்டில் அதற்கான அடித்தளத்தை இடும் சட்டதிட்டங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதனால் பிரஜைகளை வலுவூட்டும் வகையில் நாம் புதிய சட்டதிட்டங்களையும் நிறுவனங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளோம்.
நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரிசைகளைத்தான் பார்த்தோம். வரிசைகளில்தான் காலங்கள் கடந்தன. வீடுகள் இருளில் மூழ்கின. தொழில் செய்ய முடியவில்லை. கையில் பணம் இருக்கவில்லை.
ஆனாலும் நாம் இப்போது மகிழ்ச்சியுடன் புன்னகையுடன் வாழும் ஒரு நாட்டைக் காண்கின்றோம். மின்சாரத்தால் மிளிரும் ஒரு நாடு. தொழில் ஒன்றைச் செய்து கையில் பணத்துடன் வாழ முடியுமான ஒரு சூழல். இந்த மாபெரும் மாற்றத்தைச் செய்தவர் ரணில். ரணில் சவால்களைப் பொறுப்பேற்ற ஒரு தலைவர். ஆரம்பித்த வேலையை நிறைவு செய்த, நிறைவு செய்யும் ஒரு தலைவர்.
மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை அவர் இற்றைக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் அவர் இதற்காக பாடுபட்டார். அவருக்கு மேலால் இருந்த ஜனாதிபதிகள் இதற்கு அனுமதி வழங்கவில்லை. ரணிலும் தனது பணியைக் கைவிடவில்லை. மக்களுக்கு காணி உறுதி மாத்திரம் அன்றி வீட்டு உரிமையும் தற்போது கிடைக்கிறது.
ஆகவே நாட்டை மேல் நோக்கி உயர்த்தி வைக்கவும், இன்றை விட எமது வாழ்க்கையை சிறப்பாக்குவதற்குமான பலம் ரணிலிடம் தான் உள்ளது. ரணிலின் போட்டி ஏழ்மைக்கு எதிரானது. வேலையின்மைக்கு எதிரானது. வறுமைக்கு எதிரானது. போசாக்கின்மைக்கு எதிரானது.
ரணில் ஜனாதிபதிப் பதவியை வெற்றிகொள்வதற்கு போட்டியிடவில்லை.ரணில் போட்டியிடுவது இந்த நாட்டு இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக. ரணில் போட்டியிடுவது நாட்டை வெற்றியடைச் செய்வதற்காக. ரணில் போட்டியிடுவது இலங்கையை முழுமையாக அபிவிருத்தியடைந்த நடாடாக மாற்றுவதற்காக.
ஆகவேதான் ரணில் வெற்றியடைவார்.ஆகவேதான் ரணிலை தோற்கடிக்க எவராலும் முடியாது போகும்.
(நேற்றைய தொடர்)