Wednesday, September 11, 2024
Home » 9ஆவது இராணுவ படையணிகளுக்கிடையிலான கைப்பந்து போட்டி நிறைவு

9ஆவது இராணுவ படையணிகளுக்கிடையிலான கைப்பந்து போட்டி நிறைவு

by Prashahini
September 4, 2024 5:18 pm 0 comment

இலங்கை இராணுவத்தின் 13 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 224 வீர, வீராங்கனைகளின் பங்குபற்றலுடன் படையணிகளுக்கிடையிலான கைப்பந்து போட்டி, 2024 ஓகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 03 திகதி வரை பனாகொட இராணுவ உடற்பயிற்சி பாடசாலை உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

படையணிகளுக்கு இடையிலான கைப்பந்து இறுதிப் போட்டி நேற்று (03) நடைபெற்றது.

உபகரண பணிப்பாளர் நாயகமும் இராணுவ கைப்பந்து விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் மிஹிது பெரேரா இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணி 25 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் ஆனதுடன், இலங்கை இராணுவ மகளிர் படையணி 16 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றது.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை இராணுவ சிங்க படையணி 40 புள்ளிகளைப் பெற்று சாம்பியனானது. இப்போட்டியில் இலங்கை இராணுவ விஜயபாகு காலாட் படையணி 35 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

மேஜர் ஜெனரல் மிஹிது பெரேரா அவர்கள் வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இப் போட்டியை ஏராளமான சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கண்டுகளித்தனர்.

போட்டியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகளின் விபரம்:

சிறந்த வீரர் (ஆண்) கோப்ரல் எம்.எம்.என்.எஸ் அதிகாரி
சிறந்த வீராங்கனை – பெண் சிப்பாய் எஸ்.ஏ.எஸ்.எம். பெரேரா
சிறந்த எறிதல் வீரர் (ஆண்)- சிப்பாய் எஸ்.டபிள்யூ.எம். தீபால்
சிறந்த எறிதல் (பெண்)- சிப்பாய் எல்.டி.எம்.டி பெரேரா
சிறந்த பந்து காப்பாளர் (ஆண்)- கோப்ரல் எஸ்.பி.எஸ்.எம் அமரசிங்க
சிறந்த பந்து காப்பாளர் (பெண்)- லான்ஸ் கோப்ரல் இ.எம்.என்.எஸ் பண்டார

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x