நாடளாவியரீதியில் இடம்பெறவுள்ள குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு செயற்றிட்டத்திற்கு அமைவாக, கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கனி தலைமையில் நேற்றுமுன்தினம் நடுத்தீவு சமூக சேவைகள் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.
இதன்போது எம்.சாலிஹின் வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களத்தின் உத்தியோகத்தர், மாவட்ட செயலகத்தின் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் பணிப்பாளர், கிண்ணியா பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர், குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்புக்காக கணக்கீட்டு உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
(கந்தளாய் தினகரன் நிருபர்)