153
அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியில் இடர்படும் மாணவர்களுக்கான விசேட செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அண்மையில் அதிபர் க.தியாகராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக அறிவுச்சுடர் சிறுவர் வளர் கல்வி நிலையத்தின் பொறுப்பாளர் த.பாணுதேவன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
(மணல்சேனை நிருபர்)