ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொரளை தேர்தல் பிரசார அலுவலகம் ‘இயலும் ஸ்ரீலங்கா’ ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கொழும்பு பொரளை கோதமிபுரவில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அல்பிரட் சம்பத் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க, கோட்டே முன்னாள் மாநகர சபை உறுப்பினர் விஜேசிறி தாபரே, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எம்.சி. பாரத கொத்தலாவெல, கொழும்பு மாவட்ட ஐ.தே.க அரசியல் முகாமையாளர் லசந்த குணவர்தன உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றியதுடன், பெருந்தொகையான ஐ.தே.க ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
(ருஸைக் பாரூக்)ஐ.தே.கவின் பொரளை தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு
110
previous post