Home » யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

by mahesh
September 4, 2024 12:20 pm 0 comment

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றுமுன்தினம் மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சாரம், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், விமானப் படை அதிகாரிகள், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர், விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் உதவிப் பணிப்பாளர், தொழிற்துறைத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம், சந்தைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x