இலங்கை பொலிஸ் நேற்று 03 ஆம் திகதியன்று 158 ஆவது பொலிஸ் தினத்தைக் கொண்டாடியது. 1866 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 03 ஆம் திகதி ஜி. டபிள்யூ.ஆர் கெம்பல் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார். அன்றைய தினமே அரசியலமைப்பின்படி இலங்கை பொலிஸ் ஆரம்க்கப்பட்ட தினமாக கருதப்படுகின்றது. 1947 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 01 ஆம் திகதி முதலாவது பொலிஸ்மா அதிபராக ரிசட் அலுவிஹாரே தனது கடமையை ஆரம்பித்தார். அப்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1948 ஆண்டு சுதந்திரம் பெற்றப்பின்னர் பொலிஸ் படையணி காலனித்துவத்துவத்திலிருந்து பொலிஸ் சேவையாக மாற்றும் பொறுப்பை ரிச்சட் அலுவிஹாரே நிறைவேற்ற வேண்டியிருந்தது.
1870 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான வணிகக் குற்றங்கள், மர்ம கொலைகள் மற்றும் இரகசியங்களை கண்டறியும் நோக்கத்துடன் சிவில் உடையுடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அத்திட்டத்தின் கீழ் குற்றவியல் விசாரணைத் திணைக்களம் 05 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதன் மூலம் வழங்கப்படும் சேவைகள் விரிவுசெய்யப்பட்டுள்ளன.
பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவானது 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை பொலிஸ் கடமைக்காக ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நாடு பூராகவும் 54 பிரிவுகளில் 400 பொலிஸ் மோப்ப நாய்களினூடாக குற்றவியல் விசாரணைகள், போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்கள் அடையாளம் காணப்படும் கடமைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய முடிந்துள்ளது.
1952 ஆம் ஆண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றிலிருந்து இன்றுவரை பெண் பொலிஸ் ெகான்ஸ்டபிள் பதவி நிலையிலிருந்து பெண் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவநிலை வரை தனது சிறப்பான சேவையை செய்து வருகின்றனர். தற்போது 04 பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்களும், 09 பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்ளும், 11 பெண் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், பொலிஸ் பரிசோதகர்கள் பதவி நிலைகளில் 1465 பேரும், 8252 பெண் பொலிஸ் சாஜன்ட் மற்றும் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பல்வேறு பதவிகளில் தனது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றனர்.
1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் தற்போது அனைத்து பொலிஸ் நிலையங்களையும் உள்ளடக்கி கடமையாற்றி வருகின்றது.
போதைபொருள் மற்றும் வீதி விபத்தக்களை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் பொலிசார் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதுடன், விஷேட பொலிஸ் அதிரடிப் படையினர் உள்ளடங்கலாக 86000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைப் பொலிசால் நிறுவப்பட்ட 119 விஷேட தொலைபேசிச் சேவைக்கு மேலதிகமாக புதிய தொலைபேசி இலக்கமாக 107 தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தி தமிழ் மக்களின் முறைப்பாடுகள் அத்துடன் குற்றச் செயல்கள் தொடர்பாக தமிழ் மொழியிலேயே வழங்குவதற்கான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு உடனடி உதவிகளை வழங்கும் வகையில் 109 தொலைபேசி இலக்கத்தை ஸ்தாபித்து சிறுவர் மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கைகளுக்காக 24 மணிநேரமும் பெண் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிசாரால் செயல்படுத்தப்படும் மற்றொரு தனித்துவமான சேவையாக ‘பொலிஸ் மா அதிபரிடம் சொல்லுங்கள்’ (TELL IGP) இணையத்தளத்தை குறிப்பிடலாம்.
ஒவ்வொரு நபரும் தங்களுக்கு விருப்பமான தொழில் அல்லது வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்காக எவ்வளவு தகுதி பெற்றிருந்தாலும் இந்த தொழில்களைப் பெறுவதற்காக பொலிஸ் தடையகற்றல் அறிக்கையைப் பெற்றுக்கொள்வது அத்தியாவசியமான விடயமாகும். அதைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு மிகவும் செயல்திறனுடன் குறித்த அறிக்கையை வழங்குவதற்காக இலங்கை பொலிசார் நிகழ்நிலை வழியாக வசதிகளை மேலும் மேம்படுத்தியுள்ளனர்.
சமூக பொலிஸ் சேவைக்கு இணையான செயல்படுத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பதற்கான ‘யுக்திய சுற்றிவளைப்பு’ குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்காக செயல்படும் ‘மோட்டார் சைக்கிள் படை’ போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வுக்காக ‘சுவசர கதெல்ல’ பாடசாலைகளைச் சுற்றி போதையில்லா சூழலை உருவாக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘பவுர’, பாடசாலை குழந்தைகள் போதைபொருளுக்கு உட்படுவதை தடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘ஹெட தவஸ’ போன்ற சமூக சார்ந்த வேலைத்திட்டங்களை சுட்டிக்காட்டலாம்.
158 வது வருடத்தை கௌரவமாகக் கொண்டாடும் இலங்கை பொலிசானது எல்லாவகைகளிலும் சவால்களை சந்தித்து வருவதுடன் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து சிறப்பான சேவைகளை வழங்கியமை மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களினூடாக தெளிவாகின்றது. மக்கள் சேவகனாக இலங்கை பொலிஸ் தன்னை அர்ப்பணிக்கும் என்பதுடன், 158 வது நிறைவு ஆண்டை கொண்டாடும் இன் நன்நாளில் இலங்கை பொலிசானது நீண்டகாலம் சேவையை வழங்க பிராத்திப்போம்.